ஆம் குமார், எனக்கும்தான். நான் சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இன்னும் இரண்டு மாதங்களில் நமக்கு திருமணம். நினைத்தாலே மகிழ்ச்சியாகவும், பதட்டமாகவும் உள்ளது பிரியா.
சிவாவின் திருமணம் உனக்கு நினைவிருக்கிறதா? எத்தனை எத்தனை உணவு வகைகள்? வயிறும் மனதும் நிறைய நான் சாப்பிட்டேன்.
ஆமாம்!
அதே சமயம், நிறைய சாப்பாட்டை வீசி எறிய வேண்டியிருந்தது. அவ்வளவு சாப்பாடு மீந்துவிட்டது. எவ்வளவுதான் நாம் எடுத்து சாப்பிடுவது?
எவ்வளவு உணவு வீணாக்கப்பட்டது என்று பார்த்தாயா? எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியாக இருந்தது.
அவ்வாறே செய்யலாம். போதிய உணவு இருக்குமாறு உறுதிபடுத்தவும், நாம் ஏதேனும் ஒரு வழி கண்டறிந்தாக வேண்டும்.
உண்மைதான் பிரியா. வீசியெறியக்கூடிய தட்டுக்கள், கரண்டிகள் எல்லாம் குவிந்து கிடந்தன. நாம் ஏன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுக்கள், கரண்டிகள் வழங்கக்கூடாது?
ஆனால் நம் உறவினர்கள்…
200 விருந்தாளிகள் எதிர்பார்க்கும்போது, 200க்கும் மேற்பட்டோருக்கு உணவு தயார் செய்வது அவசியம்.
வீசியெறியக்கூடியவற்றுக்குப் பதில், செராமிக், ஸ்டீல்
ஆகியவற்றைப் பயன்படுத்தினால் செலவு கூடிவிடும்.
உணவு போதவில்லை என்றால் என்ன சொல்வார்கள்? நாம் அதிகமாகவே தயார் செய்வோம்!
இல்லை. நாம் 180 பேருக்கு உணவு தயார் செய்துகொள்வோம். 10 - 15% குறைத்து உணவு தயார் செய்தால் உணவு விரயத்தைத் தவிர்க்கலாம்.
உணவைப் போதிய அளவுக்கு
மட்டும் தயார் செய்துகொண்டாலே மீள்பயனீடு செய்யக்கூடிய தட்டுக்கள், கரண்டிகளுக்குப் போதிய சேமிப்பு இருக்கக்கூடும்.
“அதாவது, அன்றாடம் ஒவ்வொருவரும் இரண்டு பானை அளவு சோற்றை விரயமாக்குவது போல. இந்த எண்ணிக்கைக்கு நாம் பங்களிக்கவேண்டாம்.”
“2021ல் மட்டும் 817,000 மில்லியன் கிலோகிராம் அளவிலான உணவுக் கழிவுகள் ஏற்பட்டிருந்தன.”
சிறப்பாக கல்யாணத்தை நடத்தியதற்கு வாழ்த்துகள்! சாப்பாடு அருமையாக இருந்தது. அதிலும் சாப்பாடு விரயமாகாமல் இருந்ததில் மகிழ்ச்சி!
